#100நாடுகள்100சினிமா #49. NICARAGUA - LA YUMA (2009)

6:07:00 AM

Florence Jaugey | Nicaragua | 2009 | 90 min.


(*** English write-up & Download Link given below ***)

Nivaragua தேசத்தின் தலைநகரான Managua நகரின் ஒரு பகுதியில் வசிக்கிறாள் Luma. றுமையில் வாடும் குற்றங்கள் கணக்கில்லாமல் பெருகிக்கிடக்கும் ந்தப் பகுதியை விட்டு எப்படியாவது போய்விட வேண்டுமென்பது அவள் கனவு. காரணம் வீட்டிலேயே பெண்பித்தன் ஒருவனை சேர்த்துவைத்திருக்கிறாள் அவள் தாய். இவளது காதலனும் ஒரு ரவுடி, சதா போதையிலேயே இருப்பவன். இவளுக்கும் சரியான வேலை இல்லை. இந்த சூழலில் இருந்து தப்ப அவள் தேர்தெடுப்பது பாக்ஸிங். தீவிரமாக பாக்ஸிங் பயிற்சி செய்கிறாள். இப்படியான சூழலில் பத்திரிக்கையாளனாக வேலை செய்யும் ஒருவனுடன் பழக்கம் ஏற்படுகிறது. துணிக்கடை ஒன்றில் வேலை கிடைக்கிறது. அந்த ஊர் முனிசிபல் ஜிம்மில் பயிற்சி பெரும் வாய்ப்பும் கிடைக்கிறது. எல்லாம் தனக்குக் கூடி வருவதாக நினைக்கிறாள் யூமா. அவளது கனவு பலித்ததா இல்லையா என்பது தான் கதை.

இறுதிச்சுற்று படத்தில் மாதவன் போர்ஷனைத் தூக்கி விட்டு, மதி, மதியின் பாக்ஸிங், மதியின் குடும்பச்சூழல், மதியின் காதல் என்று வைத்தால் அது தான் La Yuma. யூமாவாக வரும் Alma Blanco அப்படியே அந்த ஊர் ரித்திகா சிங் தான். பட்டையைக் கிளப்பியிருக்கிறார். தீவிரமாக பாக்ஸிங் செய்யும் போதும், காதலனிடம் முதலில் முரண்டு பிடிப்பதும், பின்னர் உருகுவதும், கடல் அலைகளைக் கண்டு குழந்தையாக அஞ்சுவதுமாக சிறப்பாக நடித்திருக்கிறார்.    

இரு பக்கங்கள் கடல் சூழ இரு பெரும் தேசங்களைப் பிரிக்கும் ஒடுங்கிய நிலப்பரப்புப் பகுதியை 'Isthmus' என்றழைக்கிறார்கள். தமிழில் 'பூசந்தி' (இப்போது தான் கேள்விப்படுகிறேன்). அப்படி தென் அமெரிக்காவிற்கும், வடஅமெரிக்காவிற்கும் நடுவில் இருக்கும் நாடுகளில் கொஞ்சம் பெரிய நாடு நிகரகுவா (Nicargua). Costa Rica, Panama, Guatemala போன்ற இந்த நாடுகளை Central American Isthmus என்றழைக்கிறார்கள். நிகரகுவா ஸ்பானிய காலனியாக பல நூறு வருடங்கள் இருந்துவந்து விடுதலையாகியிருக்கிறது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நாடுகளிலெல்லாம் உருவெடுக்கும் உள்நாட்டுக்குழப்பம், வன்முறை, சர்வாதிகார ஆட்சி (Somoza என்ற ஒரு குடும்பம் அமெரிக்க ஆதரவுடன் 43 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது), புரட்சி (1960-1990), இயற்கைச் சீற்றங்கள் என்று சகல பக்கங்களிலிருந்தும் நிகரகுவா போட்டுப் புரட்டியெடுக்கப்பட்டிருக்கிறது. வழக்கம் போல முதல் பலி சினிமா தான்

La Yuma திரைப்படத்தின் இயக்குனரும் ப்ரென்ச் தேசத்தவருமான Florence Jaugey - டிகை, தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், இயக்குனர் என்று பன்முகம் கொண்டவர். ஒரு க்யூப இயக்குனரது திரைப்படத்தில் முதன்முதலில் நடிப்பதற்காக நிகரகுவா வந்தவர், அப்படியே செட்டில் ஆகிவிட்டார். தனது கணவரும் இயக்குனருமான Frank Pineda (நிகரகுவாவைச் சேர்ந்தவர்) உடன் சேர்ந்து 1989 ஆம் ஆண்டு தொடங்கிய தயாரிப்புக் கம்பெனி Camila Films. தொடர்ந்து குறும்படங்களையும் டாக்குமெண்டரிகளையும் மட்டுமே எடுத்து வந்த இந்தக் கம்பெனியின் முதல் முழு நீளப்படம் La Yuma. நிகரகுவா தேசத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த முதல் திரைப்படம் என்ற பெருமையும் La Yuma விற்கு உண்டு. இந்தப் படத்தையும் சேர்த்து இதுவரை வெளிவந்துள்ள மொத்தத் திரைப்படங்களின் எண்ணிக்கை 10 கூட கிடையாது. திரைப்படங்களை விட டாக்குமெண்டரிகள் நிறைய வெளிவந்திருப்பதாகத் தெரிகிறது.

பல வருடங்கள் சினிமாவே எடுத்திராத ஒரு நாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தப் படம், நன்றாகவே இருந்தது. பின்னணி இசை என்று எதுவுமில்லை. ஆனால் படத்தில் ஆங்காங்கே சில இசைக்கோர்ப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நேரான, அதே சமயம் சுவாரஸ்யமான திரைக்கதை. அந்த ஊரிலிருக்கும் மக்கள், அவர்களது வாழ்வுமுறை, கனவு, அரசியல், பிரச்சனை என்று மண் சார்ந்த கதை. மேக்கிங் கொஞ்சம் டாக்குமெண்டரி ஃபீலைக்கொடுத்தாலும் பக்கா ஃபிக்ஷன். ஆக்ஷன், க்ரைம், காதல், செண்டிமெண்ட், காமெடி, அரசியல் என்று அனைத்தையும் பேசும் தாராளமாக ஒரு முறை பார்க்கக்கூடிய அக்மார்க் கமர்சியம் சினிமா.

La Yuma திரைப்படம், இயக்குனர் Florence Jaugey, Camila Films - இவை கிட்டத்தட்ட நிகரகுவா தேசத்தின் திரைப்பட வரலாற்றையே புரட்டிப்போட்ட பெயர்கள் எனலாம். ஆஸ்கார் விருதிற்கு இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வாரம் 10 சினிமா வெளியாகும் தமிழ் மொழியில் மொத்தமாக இதுவரை 10 படங்கள் கூட எடுத்திராத ஒரு நாட்டின் திரைப்படம் ஒன்றை இந்த #100நாடுகள்100சினிமா தொடரில் அறிமுகப்படுத்துவதில் எனக்கும் மகிழ்ச்சியே.

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)

**********************

The story follows a young and rebellious girl from Managua, the Capital City of Nicaragua who is looking for a way out. She is Surrounded by drug addict friends, a loser boyfriend and a stepfather (his mother's lover), a womenizer. Yuma looks for a change and choses Boxing. She meets a journalism student who falls in love with her and also finds a job at the local dress-store. Life begins to go easy on Yuma. What happens next is the story. 

Nicaragua is a Central American Isthmus country similar to Costa Rica, Panama, Guatemala. The Country was under the Spanish rule for centuries and just like any other underdeveloped Nation has suffered economic crisis, Dictatorship, Revolution and Natural Disasters. Cinema is Nicaragua is so poor that only 10 feature films have been produced so far.
Dir. Florence Jaugey
Director Florence Jaugey, a French actress who settled in Nicaragua in the late 1980s is also a Producer and Screenwriter. She co-founded Camila Films - an independent Film Production campany, along with her partner Frank Pineda. Together they produced some short films and documentaries. La Yuma is their first feature film production and is also the first film in Nicaragua in 20 years.

The story is solid, Alma Blanco as Yuma is just awesome and the movie is really good for a underrepresented country lik Nicaragua 



Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie watching :)


You Might Also Like

2 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...