#100நாடுகள்100சினிமா #39.IRAQ - MEMORIES ON STONE (2014)

7:24:00 AM

Shawkat Amin Korkiv | Iraq | 2014 | 97 min.


(*** English write-up & Download link given below ***)

சினிமாக்களால் சமூகத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியுமா என்று சொல்லத் தெரியவில்லை, ஆனால் சிறு அதிர்வை நிச்சயம் ஏற்படுத்த முடியும். அதனாலேயே சர்வாதிகாரிகளது ஆட்சியில் ஒன்று சினிமா முற்றிலுமாகத் தடை செய்யப்படும் அல்லது அரசியல் சட்டம், மதச்சட்டம் என்ற பெயரில் ஒடுக்கப்படும்.

எனக்குத் தெரிந்த வரை சினிமா கண்டுபிடிக்கப்பட்ட போது அதிசயத்து வரவேற்காத நாடே இல்லை. ஈராக்கைப் பொறுத்தவரை சினிமா தோன்றிய காலகட்டங்கட்டத்திலேயே திரையரங்குகள் கட்டப்பட்டு அமெரிக்க மௌனப் படங்கள் திரையிடப்பட்டுள்ளது. 1940 களில் King Faisal II என்பவரது ஆட்சிக்காலத்தில் தான் 'ஈராக்கிய சினிமா' தொடங்கியிருக்கிறது. ஸ்டுடியோக்கள் கட்டப்பட்டு, படங்கள் தயாரிக்கப்பட்டு, திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. மன்னரது ஆட்சிகாலம் முடிந்த 1960-களில் வெகுஜன சினிமா குறைந்து வெறும் அரசியம் பரப்புரைக்காக மட்டும் பயன்பட்டிருக்கிறது. சதாம் உசேன் ஆட்சிக்கு வந்த 1979 ஆம் ஆண்டு முதல் அதுவும் இல்லாமல் போயிருக்கிறது. சதாம் ஆட்சியில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு. தனது வீரதீரசாகசங்களைப் பறைசாற்றும் விதமாக 'The Long Days (al-Ayyam al-tawila)' என்ற பெயரில் 'ஜேம்ஸ் பாண்ட்' படங்களான Dr. No மற்றும் Thunderball படங்களை எடுத்த பிரிட்டிஷ் இயக்குனர் Terence Young இயக்கத்தில் 6 மணிநேரம் ஓடும் ஒரு படத்தை தயாரித்தார் சதாம். அதில் சதாமாக நடித்தது அவரது மருமகன் (பின்னாட்களில் அவர் சதாமாலேயே கொல்லப்பட்டது வேறு சங்கதி). 1980 இல் ஈரான்-ஈராக் யுத்தம் தொடங்க, மொத்தமாக நின்றுபோனது ஈராக்கிய சினிமா. அதன் பிறகு எண்ணைக்கிணறுகளுக்காக அடித்துக்கொண்டது, குர்திஷ் (Kurdish) இன மக்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்தது, பஞ்சாயத்து பண்ண அமெரிக்கா உள்ளே நுழைந்தது, சதாம் வீழ்ந்தது போன்ற களேபரங்களில் சினிமாவை யாரும் கண்டுகொண்டதாய்த் தெரியவில்லை

அதன்பிறகு 2003 ஆம் ஆண்டு சதாம் கைது செய்யப்பட, 2004 ஆம் ஆண்டு மீண்டும் முழுக்க முழுக்க ஈராக்கில் எடுக்கப்பட்ட Turtles Can Fly என்ற அருமையான திரைப்படத்துடன் மீண்டும் தனது தொடங்கியிருக்கிறது ஈராக்கிய சினிமா. ஈராக்கை சதாமைக் கொலை செய்து அமெரிக்கா நூற்றுக்கணக்கில் ஈராக் போர் படங்களாக எடுத்துத் தள்ளியது, தள்ளிக்கொண்டிருக்கிறது. தங்களது மொள்ளமாறித்தனங்களையெல்லாம் தேசப்பற்று என்ற போர்வையில் திரைப்படங்களாக எடுத்து, ஆஸ்கார்களை அள்ளிக்கொடுத்து நல்ல பெயர் தேடிக்கொள்வது அமெரிக்காவிற்கு ஒன்றும் புதிதில்லையே.

'Cinema Paradiso' பாதிப்பில் தொடங்குகிறது படம் இந்தப் படம். சிறுவன் Hussein, தனது தந்தை ஆப்பரேட்டராக வேலை செய்யும் திரையரங்கிற்கு வருகிறான். அங்கு திரையிடப்பட்டிருக்கும் Yol (1982) என்ற துருக்கிய படத்தை சிலர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு நுழையும் சதாமின் வீரர்கள் படம் பார்த்துக்கொண்டிருந்தவர்களை அடித்து நொறுக்குகிறார்கள். தடைசெய்யப்பட்ட படத்தை திரையிட்டதற்காக தந்தையையும் அடித்து இழுத்துச் செல்கிறார்கள். இருட்டில் பயந்தபடி ஒளிந்து இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறான் சிறுவன் ஹுசைன்.

அடுத்தகாட்சி நிகழ்காலத்திற்கு மாறுகிறது. ஹுசைன் தனது பால்ய நண்பன் Alan உடன் சேர்ந்து சதாம் ஆட்சிக்காலத்தில் நடந்த மிகப்பெரிய படுகொலைச் சம்பவமான ‘Al-Anfal massacre’ பற்றிய ஒரு படத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறார். சதாம் குர்திஷ் இனமக்களை அடைத்துவைத்துக் கொடுமைபடுத்திய சிதிலமடைந்த ஒரு பிரம்மாண்ட சிறைச்சாலையிலேயே படப்பிடிப்பு நடத்த முடிவுசெய்யப்படுகிறது. ஹீரோவாக நடிக்க பிரபல பாடகன் Roj Azad என்பவனை ஏற்பாடு செய்கிறார்கள். அனுமதி கிடைக்காததால் ஈரானிலிருந்து படப்பிடிப்பிற்கான உபகரணங்களை எப்படியோ கடத்திக்கொண்டு வந்துவிடுகிறார்கள். சதாம் எதிர்ப்புப் படமென்பதால் உள்ளூரில் படத்திற்கு பலத்த வரவேற்பு. நூற்றுக்கணக்கில் ஆண்கள் நடிக்க வருகிறார்கள். ஆனால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒரு பெண் வேண்டும். ஈராக்கில் எந்தப் பெண்ணும் நடிக்கத் தயாரில்லை. ஈரானிலிருந்து நடிகையை வரவைக்கலாம் என்றால் அதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இப்படியான சூழலில் Sinur என்ற பெண் படமெடுப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டு தானாக நடிக்க முன்வருகிறார்.

தான் நினைத்த படத்தை ஹூசைனால் எடுக்க முடிந்ததா? தானாக சிமூர் நடிக்க முன்வந்த காரணம் என்ன? அதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன?

இந்தப் படம், இந்தியாவின் முதல் திரைப்படமான Raja Harishchandra (1913) படத்தை எடுக்க முயற்சி செய்யும் Dadasaheb Phalke அவர்களது கதையைச் சொல்லும் மராத்தி திரைப்படமான Harishchandrachi Factory (2009) படத்தை நினைவுபடுத்தியது. சினிமாவிற்குள் சினிமா. சாதாரணமாக ஒரு படத்தை எடுத்து வெளியிடுவதே பெரும்பாடு. இதில் மதக்கட்டுப்பாடுகள் அதிகமுள்ள, சர்வாதிகார ஆட்சியிலிருந்து விடுபட்டு, வெள்நாட்டுக்கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு நாட்டில் ஒரு சினிமாவை எடுப்பதில் எவ்வளவு நடைமுறைச் சிக்கல் இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். அந்தச் சிக்கல்களையெல்லாம் காட்சிகளாக்கி அற்புதமான ஒரு படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குனர் Shawkat Amin Korki. இயக்குனராக மூன்றாவது படம்.

தேவையில்லாத காட்சி என்று ஒன்று கூட இல்லை. டக்டக்டகென்று அடுத்தடுத்த காட்சிகளுக்குச் சென்று விடுகிறார்கள். மிக அருமையான படத்தொகுப்பு. ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் சொல்லப்பட்டவுடன், பிலிம் ஃபார்மேட்டிலேயே நாமும் காட்சிகளைக் காண்கிறோம். கட் சொல்லப்பட்டவுடன் அதே காட்சி நார்மலாக வருகிறது. மிக அருமையான உத்தி இது. நடிகர்களது பங்களிப்பு பற்றியும் சொல்லியே ஆக வேண்டும். எப்படியும் இந்தப் படத்தை எடுத்துவிட வேண்டுமென்று தவிக்கும் ஹூசைனும், வீட்டை விற்றாவது படப்பிடிப்பு தொடர பணத்தை ஏற்பாடு செய்யத் தயாராய் இருக்கும் நண்பன் ஆலனும், எந்தத் தியாகத்தையும் செய்து இந்தப் படத்தில் நடித்தே தீர்வது என்று உறுதியாக இருக்கும் சினூரும், நான் நடிப்பது எனக்காக அல்ல, உங்களுக்காக என்ற மெத்தனத்திலேயே உலாவரும் அசாத் ஆகியோர் மிகச் சிறப்பாக எழுத்தப்பட்டு, அருமையான நடிகர்களால் உயிரூட்டப்பட்ட கதாப்பாத்திரங்கள். சென்டிமென்ட் காட்சிகள் உண்டு. ஆனால் சோகத்தைத் திணிக்காமல் படத்தினூடே கதைப்போக்கிலேயே வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் சொல்ல வேண்டிய சினிமாவை முதலிலிருந்து தொடங்கியிருக்கும் ஈராக் போன்ற ஒரு நாட்டிலிருந்து, தரத்தில் ஒரு சிறு குறை கூட இல்லாமல் இப்படியொரு படம் வெளிவந்திருப்பது அவசியம் பாராட்டப்படவேண்டிய ஒன்று.

ஒரே ஒரு குறை – Memories on Stone என்ற தலைப்பு மட்டும் பொருந்தவில்லையோ என்று தோன்றியது. தலைப்பிற்கான காரண விளக்கம் படத்தில் உண்டு என்றாலும், பிரதானக் கதை அதுவல்ல.

மொத்தத்தில், சினிமா விரும்பிகள் அனைவரும் பார்த்தே தீர வேண்டிய அருமையான படம் - Memories on Stone.

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)

*********************

Hussein and his friend Alan are preparing to shoot a movie about Al-Anfal massacre, the infamous Kurdish genocide under Saddam Hussein. With the location fixed, equipement smuggled from Iran, hero fixed (a local famous pop singer with big connections) and hundreds of extras ready, the shooting delays due to the Heroine. No woman or no Iraqi family is ready to send their woman to act in a movie. The crew tries to bring an actress from Iran but that idea too doent work out as planned.

To their surprise, Sinur, a teacher of handicapped children with a desire to act in movies — especially this movie approches the crew. What happens next is the story.

The movie is so well-made that it reminded me of the Marathi Film, Harishchandrachi Factory (2009) that showed us how the first Indian Film Maker Dadasaheb Phalke struggled to bring out his first film Raja Harishchandra (1913). The movie begins with a Cinema Paradiso-style prologue which is an excellent tribute.

Dir. Shawkat Amin Korkiv

Directed by Shawkat Amin Korkiv, The story is good, acting is perfect, well-captured, excellently cut and complety satisfying as a end-product. Memories on Stone is one of the initial movies to be both produced and shot in Iraq after the fall of Saddam.

A Must Watch Film for all movie lovers!
  

Other Recommended movies from Iraq
1)   Turtles Can Fly (2004)
2)   Son of Babylon (2011)



Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie watching :)

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...