#100நாடுகள்100சினிமா #35.CHILE - NO (2012)

10:36:00 PM


Pablo Larrain | Chile | 2012 | 118 min.

(*** English write-up given below ***)

உண்மைச்சம்வங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமென்பதால், கொஞ்சம் ஹிஸ்டரியுடன் சேர்த்து படத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

செப்டம்பர் 11, 1973 - மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி Salvador Allende என்பவரை வீழ்த்தி, அமெரிக்க உதவியுடன் ராணுவப்புரட்சி செய்து, ஆட்சியைப் பிடித்தவர் General Augusto Pinochet. 16 வருடங்கள் வரை நடந்த இவரது ராணுவ ஆட்சியில், அரசியல் காரணங்களுக்காக  கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுபவரது எண்ணிக்கை சுமார் 3,200 பேர். 30,000 பேருக்கும் அதிகமானோர் சித்ரவதை செய்யப்பட்டதாகவும், 1312 பேர் நாடுகடத்தப்பட்டதாகவும், 3000 பேருக்கு மேல் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. எதிர்கட்சி என்ற ஒன்றையே இல்லாமல் செய்து, யூனியன்களைத் தடை செய்து சிறந்த சர்வாதிகாரியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் ஜெனரல் பினொசெட்.

அப்படிப்பட்டவரை ஜனநாயக முறைப்படி சிலி மக்கள் பதவி விலக வைத்த கதையின் ஒரு பகுதி தான் இந்தப் படம். 

General Augusto Pinochet
ஆட்சிப்பொறுப்பிலிருந்த பினோசெட் வைத்தது தான் சட்டமாக இருந்தது. உலக நாடுகளின் நெருக்குதல் காரணமாக, செப்டம்பர் 11, 1980 ஆம் ஆண்டு தனது ஆட்சியை சட்டபூர்வமாக்கிக்கொள்ள (Legitimize), தனக்குச் சாதகமாக ஒரு கமிஷனை உருவாக்கி புதிய சட்டதிட்டங்களை நிறைவேற்றினார். அதன்படி ஜனதாதிபதியைத் தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடத்தப்படும். அதன்படி 1980 இல் நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்று 8 ஆண்டுகள் தன்னை ஜனாதிபதியாக நீட்டித்துக்கொண்டார் பினோசெட். 1987 இல் தொடர்ந்த சர்வதேச மற்றும் உள்ளூர் எதிர்ப்பலைகளால் அதுவரை மறைமுகமாக இயங்கிவந்த எதிர்க்கட்சிகளை சட்டப்பூர்வமாக்கினார். காரணம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த 8 வருடங்களுக்கு சிலியை ஆளப்போவது யார்? என்பதைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு மீண்டும் நடக்கவிருப்பதால், தானும் ஜனநாயக முறையில் ஆட்சி செய்பவனே என்று காட்டிக்கொள்ள பினோசெட் செய்த பல 'நல்ல' காரியங்களில் ஒன்று. 

The 1988 Chilean National Plebiscite என்றழைக்கப்பட்ட அந்த வாக்கெடுப்பின்படி அக்டோபர் 5, 1988 அன்று பொதுமக்கள் - YES அல்லது NO என்று வாக்களிக்க வேண்டும். (ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடரலாமா வேண்டாமா YES or NO, வாக்கெடுப்பு போல)

'YES' என்றால் பினோசெட் அடுத்த 8 ஆண்டுகளுக்கு பிரதமராகத் தொடரலாம். 

'NO' என்றால் பினோசெட் வேண்டாம், பொது வாக்கெடுப்பின் மூலம் புதிய ஜனாதிபதி தேர்தெடுக்கப்பட வேண்டும். 

சர்வாதிகார ஆட்சி நடந்துகொண்டிருக்கும் ஒரு நாட்டில் மாற்றத்தை உருவாக்க நினைக்கும் நாங்கள் எப்படி பொதுவில் வாக்கு சேகரிக்க முடியும் என்று மற்ற (ஜனநாயக)கட்சிகள் கோரிக்கை வைக்க, விளம்பரப் பிரச்சாரங்கள் மூலம் செய்து வாக்குசேகரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, தொலைக்காட்சியில் பின்னிரவு அல்லது அதிகாலை இரு தரப்பிற்கும் 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. அந்தப் 15 நிமிடங்களில் தங்களது பிரச்சாரங்களை விளம்பரங்களாக இரு தரப்பினரும் ஒளிபரப்பிக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. வாக்கெடுப்பிற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன் இந்த விளம்பரங்கள் வரத் தொடங்கின. தங்களுக்குக்கிடைத்த இந்த அருமையான வாய்ப்பைச் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டன எதிர்கட்சிகள். 

பினொசெட்டின் YES பிரச்சாரக்காரர்கள் கையிலெடுத்த ஆயுதம் 'பயம்'. இத்தனை ஆண்டுகள் சிலி தாக்குபிடிக்கக்காரணமே நம் பிரதமர் பினொசெட் தான், அவரில்லையென்றால் சிலி இல்லை, அவர் இல்லாமல் சிலியால் தாக்குபிடிக்கவே முடியாது, அவரே நம் கடவுள் என்று ஒரு வித பய உணர்வையே கொடுத்து மக்களிடம் ஆதரவு வாங்க முயற்சிசெய்துகொண்டிருந்தனர். எப்படியும் நாம்தான் ஜெய்ப்போம் என்ற மெத்தனம் ஆளும்கட்சிக்கு நிறையவே இருந்தது.

எதிர்மறையாக 'NO' குழுவினர் 'நம்பிக்கை'யைக் கையில் எடுத்தனர். 'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' போல 'NO' ஆதரவாளர்கள் கையிலெடுத்த கோஷம் (Slogan) - "சிலி, மகிழ்ச்சி வந்துகொண்டிருக்கிறது (Chile, Joy on it's way)". பினோசெட் ஆட்சியின் துயரத்தைப் பிரதானப்படுத்துவதற்கு பதில் முரணாக நம்பிக்கையை, மகிழ்ச்சியைப் பிரதானப்படுத்தி பிரச்சாரம் செய்தனர். கலர்ஃபுல்லாக இருந்தன அவர்களது விளம்பரங்கள். சந்தோஷம் வந்துகொண்டிருக்கிறது, அதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் NO விற்கு வாக்களிப்பது மட்டுமே என்று பிரச்சாரம் செய்ய அது செம்ம ஹிட்! ஆளும்கட்சியினர் அதே உத்தியைத் தாங்களும் காப்பியடிக்கும் அளவிற்கு புதுமையாக, நம்பிக்கையூட்டும் விதமாக, முக்கியமாக மக்களைக் கவரும் வித்தத்தில் அமைந்தன NO பிரச்சாரங்கள்.   

தினம் தினம் 'சொன்னீர்களே செய்தீர்களா', 'என்னம்மா இப்படி பண்றீங்களேமா', '' தினம் ஒரு முதல்வர ஸ்டிக்கர்ல பாத்துருப்ப, பேனர்ல பாத்துருப்ப தொகுதில பாத்துருக்கியா போல தினம் புதிதாக ஏதாவது ஒன்றை டி.வியில் போட்டுக்கொண்டே இருக்க, வேறு வழியில்லாமல் YES கூட்டமும் NO போல கவர்ச்சிகரமான டிரிக்'களையே, ஏன் இரண்டு விளம்பரங்களிலும் நடித்த நம் கஸ்தூரி பாட்டி போல, அதே நடிகர்களை தங்களுக்கு சாதகமாகப் பேச வைத்துகூட பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். கூடவே YES பிரச்சார ஒருங்கிணைப்பாளர்களை கண்காணிப்பது, அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வது, பின் தொடர்ந்து சென்று பயமுறுத்துவது, அவர்களது விளம்பரம் டி.வி அலுவலகம் சென்று சேர விடாமல் இடையில் புகுந்து பிடுங்குவது, பிரபல டிவி தொகுப்பாளரும், பினொசெட்டின் ராணுவ அரசாங்கமான Junta வால் தடைசெய்யப்பட்டவருமான Patricio என்பவர் இந்த பிரச்சார விளம்பரங்களை டிவியில் தொகுத்து வழங்கி வாக்கு சேகரித்தார். அவர் மேல் ஒரு கேஸைப் போட்டு வேண்டப்படும் குற்றவாளி என்று அறிவிப்பது என்று என்னென்ன பண்ண முடியுமோ அத்தனையையும் செய்து பார்த்தது. இந்த விளம்பரப் பிரச்சார சம்பவங்கள், அதில் சம்பந்தப்பட்ட முக்கியத் தலைகளின் கிளைக்கதைகள், எலெக்ஷன், ரிசல்ட் தான் படம். படத்தின் ஹீரோ, இந்த, NO பிரச்சாரத்திற்கான விளம்பரங்களை வடிவமைக்கும் Rene Saavedra என்ற புனைவுக் கதாப்பாத்திரம்.

படத்தை இயக்கியிருப்பவர் Pablo Larrain. தனது படத்தைப் பற்றி - This is an Epic story, the story of a triump. It's how they defeat a dictator - probably on of the biggest bastards that we had in Humankind என்று சொல்லியிருக்கிறார். Rene Saavedra ஆக பிரபல மெக்ஸிகன் நடிகரான Gael Garcia Bernal நடித்திருக்கிறார். 1988 இல் நடக்கும் கதை என்பதால் மொத்தப்படத்தையும் அந்தக்காலத்தில் பிரபலமாக இருந்த, தொலைக்காட்சிகள் பயன்படுத்திய ஃபிலிம் கேமரா (3/4 Inch Sony U-matic Magnetc Tape) கொண்டேடு படமாக்கியிருக்கிறார்கள். இதனால் ஒரிஜினல் ஃபூட்டேஜ்களைப் பக்காவாக படத்துடன் மிக்ஸ் செய்து கொடுக்கமுடிந்திருக்கிறது. செம்ம ஐடியா அது. புதுமையாகவும் இருந்தது, ஒரிஜினலாகவும் இருந்தது.    

இதில் ஒரு முக்கியமான விஷயம். 

சர்வாதிகாரி ஜெனரல் Augusto Pinochet பதவி விலகக்காரனமாக இருந்த NO பிரச்சாரக்குழுவின் பல்வேறு முயற்சிகளில் ஒன்று டிவி விளம்பரப்பிரச்சாரமே தவிர முழுக்க அதுவே காரணமல்ல. NO (2012) திரைப்படம் சந்தித்த எதிர்ப்புகளில் முக்கியமானது, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவத்தைச் சாத்தியமாக்கியது வெறும் கலர்ஃபுல் டி.வி விளம்பரங்கள் மட்டுமே என்கிற ரீதியில் இருக்கிறது இந்தப் படம். அது தவறு. பலர் தங்களது உயிரைக்கொடுத்து NO பிரச்சாரத்திற்காக வேலை செய்திருக்கிறார்கள். அவர்களால் தான் மாற்றம் சாத்தியமானது என்று சொல்லியிருக்கிறார்கள், NO பிரச்சாரத்தின் முதன்மை இயக்குனரான Genaro Arriagada உட்பட. இதனால் சொந்த நாடான Chile இல் படத்திற்கு பெரும் வரவேற்பு இல்லை. ஆனால் உலகளவில் பட்டையைக்கிளப்பியிருக்கிறது.

அனைத்து துறைகளிலும் திறமையாக எடுக்கப்பட்ட அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்.

லைக் & ஷேர் செய்யுங்கள். படம் உங்களுக்குப் பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)

*************************************

September 11, 1973 - In Chile, General Auguto Pinocher, backed up by United States overthrew the Democratically elected President Salvador Allende and assumed power in Chile ending Civilian Rule. President Augusto Pinocher ruled Chile for around 17 years. During his regime, around 3200 were killed, 30000 tortured, more than 80000 arrested and 3095 went missing. He banned all National parties and Public Unions. But in order to legitamize his power, In 1980 a new Constitution was formed by a commision (in favour of Pinochet), through voting (Presidential Referendum) which allowed another 8 year presidential rule for Pinochet. In 1988, during the next referendum, With increasing opposition internally and internationally, Pinochet was forced to legalized other political parties and allow electorial campaigns. If the YES won, Pinochet will continue as President of Chile for the next 8 years. If NO wins, general elections will be held and a new President will be elected.

NO (2012) movie follows the campaign period during The 1988 Chilean National Plebiscite, where each campaign side were given 15 minutes for their political advertising on TV. While 'YES' campaign focussed mainly on 'Fear' and showcased how Pinochet lead Chile to its rise, his success stories, his connections and his golden rule, the NO side as an irony focussed on Joy. Their Slogan was Chile, Joy is on its way and their campaign was colorful and full of Hope.
Dir. Pablo Larrain
Directed by Pablo Larrain who when asked about the movie said - "This is an Epic story, the story of a triump. It's how they defeat a dictator - probably on of the biggest bastards that we had in Humankind". Mexican actor Gael Garcia Bernal plays Rene Saavedra, a fictional character, an on-demand advertisement creator who works for the NO campaign

A must watch movie.

Other Recommended movies from Chile

1) Machucha (2004)
2) The Club (2015)
3) The Postman (1994)
4) The Maid (La Nana-2009)

Trailer - https://www.youtube.com/watch?v=ApJUk_6hN-s
Download Link – https://kattorents.net/no-2012-dvdrip-xvid-horizon-artsubs-tt8016264.html 

Blog - http://babyanandan.blogspot.in/2016/05/100-100.html 
Letterboxd - https://letterboxd.com/pradeepsastra/list/100-countries-100-films-100-100/

Hit Like & Share. Reccomend this page to your friends. Happy movie watching :)

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...