#100நாடுகள்100சினிமா #27. MALAYSIA - OLA BOLA (2016)

8:45:00 AM


Chiu Keng Guan | Malaysia | 2016 | 108 min.


(*** English write-up & Download Link given below ***)

தமிழ் சினிமாவில் இந்த திருட்டு வி.சி.டி, டி.வி.டியெல்லாம் எங்கு தயாராகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கடைக்காரர்களிடம் பேச்சுக்கொடுத்த பொழுது, பெரும்பாலானவர்கள் சொன்ன இடம் மலேசியா ('அயன்' படத்துல கூட சூர்யா மலேசியாலருந்து தான திருட்டி விசிடி கடத்தி வருவாப்டி). தமிழர்கள் அதிகம் வாழும் நாடென்பதால், புதிய படங்கள் இங்கு தமிழகத்தில் வெளியாவதற்கு முதல் நாளே மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகிவிடுவது வழக்கம். டிஜிட்டல் யுகத்திற்கு முன் பிரிண்ட்கள் ரிலீஸிற்கு முதல்நாளே அங்கு அனுப்பிவைக்கப்படும். சுடச்சுட திருட்டு பிரிண்ட்டும் ரெடியாகி இந்தியாவிற்கு வந்திறங்கிவிடும். இந்தக் கதையை ஏன் சொல்கிறேன் என்றால், தமிழ் உள்ளிட்ட பல மொழித் திருட்டு வி.சி.டி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் (அல்லது இருந்த) மலேசியாவிலிருந்து வருடத்திற்கு 20 படங்கள் கூட வெளியாவதில்லை. இந்த 20 இல் குறைந்தது 5 தமிழ் படங்களாவது இருக்கும். 3 கோடிக்கு கொஞ்சம் அதிக மக்கள் வாழும் சிறிய நாடாக இருந்தாலும், பல மொழி பேசும் பல இனத்தவர் சேர்ந்து வாழும் நாடு அது. 

அநேக மலேசியத் தமிழ் படங்கள் கிடைக்கவில்லை. கிடைத்த படங்களில் பார்த்தே தீர வேண்டிய அளவிற்கான குவாலிட்டி இல்லை. கொஞ்சம் பிரபலமான, பார்க்க வேண்டிய, புதிய படம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதலாம் என்று தேடிய பொழுது கிடைத்த படம் இந்த Ola Bola. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 1980 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக்ஸ் கால்பந்து தகுதிச் சுற்று போட்டிகள் நடந்த சமயம் மலேசிய ஃபுட்பால் டீம் எதிர்கொண்ட சவால்களைச் சொல்கிறது.

Marianne ஒரு தொலைக்காட்சி நிருபர். உள்ளூர் ஃபுட்பால் டீமை உற்சாகப்படுத்தும் விதமாக ஒரு நிகழ்ச்சியை தயார் செய்யச் சொல்லப்படுகிறது. பெரிய அளவில் சாதிக்க வேண்டி மலேசியாவை விட்டு வெள்யேறி லண்டனில் வேலை செய்யும் ஆர்வத்தில் இருக்கும் Marianne, கடைசி நிகழ்ச்சியாக, வேண்டா வெறுப்பாக 1980 ஆம் ஆண்டு நேஷனல் டீமில் விளையாடிய Eric என்பவரை பேட்டி காண பயணமாகிறார். Eric தனது நினைவுகளிலிருந்து சொல்லும் சம்பவங்கள் வாயிலாக மலேசியாவின் பிரபல ஃபுட்பால் டீமைப்பற்றியும் அதன் நட்சத்திரங்களான Captain Chow Kwok, Goal Keeper முத்து, Striker அலி, Coach Harry Mountain, Commentator ரஹ்மான் உள்ளிட்டவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்கிறோம். இவர்கள் அனைவரும் முறையே Soh Chin Aun, R.Arumugam, Hassan Sani, Bront Palarae என்று உண்மையில் வாழ்ந்த மலேசியன் ஃபுட்பால் டீம் வீரர்களது பாதிப்பில் உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரங்களே.

Ola Bola என்றால் Hello Football என்ற அர்த்தமாம். Classic இல்லையென்றாலும் பெயருக்கேற்ப அருமையான ஃபுட்பால் படம் இந்த Ola Bola. நாடே எதிர்பார்க்கும் ஒரு டீம், அதை தன் டீம் என்று நினைத்து வழிநடத்தும் கேப்டன், புதிய கோச் வரவு, வீரர்களது குடும்பப்பின்னணி அதனால் வரும் பிரச்சனைகள், வீரர்களுக்குள் இருக்கும் நட்பு, விடாமுயற்சி, நாட்டுப்பற்று, சாதிப்பதில் இருக்கும் வெறி என்று ஒரு பெர்ஃபெக்ட் ஸ்போர்ட்ஸ் டிராமாவில் என்னென்ன இருக்க வேண்டுமோ அது எல்லாமே இந்தப் படத்திலும் உண்டு. வாழ்ந்த லெஜெண்ட்களை சூப்பராக கௌரவப்படுத்தியிருக்கிறார்கள்.

ஃபுட்பால் மேட்ச்களை மிகத் திறமையாகப் படம்பிடித்திருக்கிறார்கள். Aerial காட்சிகளைப் படம்பிடிக்க ஆஸ்த்ரேலியாவிலிந்து ஆள் வரவைத்திருக்கிறார்கள். அர்ஜெண்டினாவிலிருந்து ஸ்பெஷல் டீம் விஷவல் எஃபெக்ட்ஸ் வேலைகளைப் பார்த்திருக்கிறார்கள். 4 மாதங்கள் செலவழித்து கிராஃபிக்ஸில் மலேசியாவின் பிரபல Merdeka ஸ்டேடியத்தை உருவாக்கி பயன்படுத்தியிருக்கிறார்கள். தொழில் முறை நடிகர்கள் இல்லாமல் ஃபுட்பால் வீரர்களைத் தேர்ந்தெடுத்து நடிப்புப் பயிற்சி கொடுத்து நடிக்கவைத்திருக்கிறார்கள்.படத்தில் தமிழ், ஆங்கிலம், மலாய், Mandarin, cantonese, Hakka, Hokkien என்று 7 மொழிகள் பேசப்படுகிறது. பாக்ஸ் ஆபீஸில் படம் ஹிட்டடிக்கவில்லை. தோல்விப்படமும் அல்ல. கையைக் கடிக்காமல் சிறிது லாபத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது. 

படத்தை இயக்கியிருப்பவர் Chiu Keng Guan. 

Lunar Trilogy என்ற பெயரில் இவர் இயக்கிய மூன்று படங்களான WooHoo! (2010), Great Day (2011), The Journey (2014) மூன்றும் நல்ல வரவேற்பைப் பெற்ற பட்ங்கள் என்று தெரிகிறது. கிடைத்தால் பார்க்க வேண்டும்.

Ola Bola - ஒரு முறை பார்க்கக்கூடிய பக்கா ஃபுட்பால் சினிமா!

பி.கு: மலேசிய நண்பர்கள் பார்க்கவேண்டிய படங்கள் என்று ஒரு லிஸ்ட் கொடுத்தால் மகிழ்வேன் 

பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள். 

******************

Ola Bola is a perfect Sports Drama from Malayasia inspired by the events that happened in 1980 during the Summer Olympics Season. Inspired by real life events and characters we get to know the story of the Malaysian National Football Team of the 1980's who are trying hard to qualify for the Olympics which they missed the previous season.

Marianne is a Journalist. She is asked to do a special program about the 80's National team which will inspire the local football team. With less interest due to her own aspirations of going out of Malaysia and settling in England Marianne decides to go on one last trip for the channel to meet Eric, a former football player of the 80's Team. Through Eric, we get to know the 80’s National Team Players Captain Chow Kwok, Goal Keeper Muthu, Striker Ali, Coach Harry Mountain, Commentator Rahman who are based on the real-life Malaysian Football Legends Soh Chin Aun, R.Arumugam, Hassan Sani, Bront Palarae respectively. 

Dir. Chiu Keng Guan
Definitely not a Classic but an excellent tribute by Malaysian Filmmaker Chiu Keng Guan to the 80’s legends

Cinematography is Stunning especially the aerial shots which were done by a Australian Crew and the Visual effects in which an Argentine company helped. The editing is smooth and the CG created Merdeka Stadium Crowd is perfect.

Definitely a one-time watch Football Film! 



Hit Like & Share. Recommend this page to your friends. Happy movie watching 

You Might Also Like

0 comments

மேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...